உலக நாயகன் கமலஹாசனின் அட்டகாசம்

சுவாதி பிலிம்ஸ் சர்க்கியூட் சார்பில் மாலதி வேலு, பத்தூள் சுக்குருல்லா தயாரிக்கும் திரைப்படம் ஆரம்பமே அட்டகாசம். இத்திரைப்படத்தில் “லொள்ளுசபா” ஜீவா, சங்கீதா பட், பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஜாங்கிரி மதுமிதா, “லொள்ளுசபா” மனோகர், முனைவர் ஞானசம்பந்தம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காதலும், காமெடியும் கலந்த இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டதை தொடர்ந்து டிரைலரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இத்திரைப்படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சி இடம் பெற்றிருப்பதை கேள்விப்பட்டு கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகன் ஜீவாவிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

உலகநாயகன் மற்றும் சூப்பர்ஸ்டார் இரண்டு பேரின் வாழ்த்துக்களை பெற்ற இத்திரைப்படம் மே 5&ந் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தை பிரைடே பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனத்தார் வெளியிடுகின்றனர்.