தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்குக்கு போகும் ஹரிஷ் கல்யாண்

‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு திரையுலகிற்கு செல்கிறார்.

சுரேஷ் பாபு வழங்கும், சுரேஷ் பாபு புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். பட்டாபி இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

பரபரப்பான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன், சாய் ரோனக்கும் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல மாடல் பூஜா தோஷி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.