அடுத்த ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “எங்களை யாரலும் தடுக்க முடியாது, ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்போம். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்டுவிடும். நானும், கார்த்தியும் ரூ.10 கோடி நன்கொடை வழங்குகிறோம்.” என்று கூறினார்.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் பிற்பகல் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.