தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது.

தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு முதல் நிகழ்வாக ஆண்டறிக்கையை கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும் ஆனால் அதை உணர்ச்சியூட்டும் உரையாக மாற்றி கருணாஸ் வழங்கினார்.
முதலில் நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடு உதவி செய்த ஹன்சிகாவுக்கும் விழாவின் செலவை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளர் -நடிகர் நட்டிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

1.12.1204முதல் 31.3.2015 வரையிலான ஆண்டறிக்கையை கருணாஸ்  வாசித்தார். கல்வி,மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவி என 7,75,500, வழங்கப் பட்டதைக் கூறினார்.

‘குருதட்சணை’ திட்டம் பற்றி விளக்கித் துணைத்தலைவர் பொன்வண்ணன் உரைஆற்றினார்.அவர் பேசும் போது, ‘ ”குருதட்சணை ‘திட்டம்  என்பது தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் நாடக நடிகர்களைப் பற்றித் தகவல்கள் சேகரித்து ஒருங்கிணைக்கும் திட்டமாகும். செயற்குழு உறுப்பினர்கள் 10 குழுவாகப் பிரிந்து 2500 பேரில் 2050 பேரை பதிவு செய்ய உதவினார்கள். புகைப்படம் ,தகவல், வீடியோ, குரல்பதிவு போன்றவை நாடக நடிகர்களுக்கும் வாய்ப்புகளைத் தேடித்தரும் .இவற்றைத் தொகுத்து டைரக்டரி உருவாக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். தங்களுக்கான நடிகர்களை இயக்குநர்கள் தேடிக்கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

அடுத்து மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் ஒருவர் தேர்வு செய்து  நிதி உதவி வழங்கப் பட்டது.

நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார்.

நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய விஷால் விளக்கினார்.

விஷால் பேசும் போது,
”1. பெரிய ஆடிட்டோரியம்.இ து 1000 பேர் அமரும் வசதி கொண்டது.

2. சிறிய திருமண மண்டபம் .இது 300 பேர் அமரும் வசதி கொண்டது.
.
3. பெரிய திருமண மண்டபம் .இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.
4.  சாப்பிடுமிடம் 400பேர் அமரும் வசதி கொண்டது.
5. பிரிவியூ திரையரங்கம் 150பேர் அமரும் வசதி கொண்டது.
,6. நடிகர் சங்க அலுவலகம் .
7.நடிகர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம்.இது  2 00 பேர்  கொண்டது.

அடுத்து கார் பார்க்கிங் .இது 165 கார்களுக்கான கார் நிறுத்தமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டடமாகக் கட்டப்படும். இதற்கு 26 கோடிரூபாய் செலவாகும். கடன் 2கோடி உள்ளது .இந்தக் கட்டுமானத் தொகையைப் பெற நட்சத்திரக் கிரிக்கெட், விஷால் கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத செலவை திரு. ஐசரி கணேஷ் அவர்களும் , பிரிவிவ் திரையரங்கத்திற்கான மொத செலவை திரு .சிவகுமார்,சூரியா,
கார்த்தி குடுபத்தினர் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்

இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது.

இதற்காக  ஏப்ரல் 17ல் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தவிருக்கிறோம்.

சூப்பர்ஸ்டார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது. ”

என்றவர், இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்வதாக கூறினார்.

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்கைப்’ மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார்.

நடிகர் சங்கத்தின் கட்டட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.

பொருளாளர் கார்த்தி பேசும் போது ” இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என்பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கை யேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத்திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம். ”என்றார்.

தலைவர் நாசர்பேசும் போது ” இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி. அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை  நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்.” என்றார். நிகழ்ச்சியில் அறிமுகவுரை மட்டுமல்ல தொகுப்புரை நன்றியுரை எல்லாமும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆற்றினார்.

நடிகர் சங்கம் 62 வது பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டத்தின் மாதிரி கட்டத்தை  முத்த நடிகர் சிவகுமார் , ஆருர்  தாஸ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர் .

பொதுகுழுவில் கலந்துகொண்டவர்கள்
தலைவர் –  நாசர்
துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ்
பொது செயலாளர் – விஷால்
பொருளாளர் – கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பூச்சிமுருகன்,ராம்கி,பசுபதி,,ஸ்ரீமன்,பிரசன்னா,விக்னேஷ்,T.P.கஜேந்திரன்,கோவை சரளா,நளினி,நிரோஷா,A.L.உதயா,ரமணா,பிரேம் குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதி தினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா

நியமன குழு உறுப்பினர்கள்
மனோபாலா
சரவணன்
அஜய் ரத்தினம்
காஜாமொய்தின்
மருதுபாண்டியன்
ஜெரால்டுமில்டன்
வாசுதேவன்
காந்தி
காளிமுத்து
ரெத்தினசபாபதி
சரவணன்
காமராஜர்
ரகுபதி
லிதாகுமாரி
J.K.ரித்தீஷ்
மனோபாலா
ஹேமச்சந்திரன்

கடிடா நியமன குழு உறுபினர்கள்
ஐசரி கணேஷ்
S.V.சேகர்
பூச்சி முருகன்
குட்டி பத்மினி
ராஜேஷ்

பொதுக்குழுவில் கலந்துகொண்ட விருந்தினர்கள்

சூர்யா, வடிவேலு ,செந்தில்,விமல்,  விஷ்ணு ,ஜெயம் ரவி ,சூரி,விஜய் சேதுபதி ,பப்பி சிம்ஹா ,சுந்தர்.C ,K.S.ரவி குமார் ,ஜெயா பிரகாஷ் , R.பாண்டியராஜன் , அசோக் ,ஷாம் , பரத் , ஸ்ரீனிவாசன் (பவர் ஸ்டார்) , சின்னி ஜெயந்த், அப்பு குட்டி ,மோகன் (மைக்) ,சரவணன் ,நாட்டி நடராஜன் , A.L.அழகப்பன் , சங்கர் கணேஷ் , நிழல்கள் ரவி,ரகுமான், வைபோவ், சங்கீத, சுகஷினி, இனியா, ரோகினி, ரேக்கா, சச்சு , சுகன்யா, விஜய் கார்த்திகேயன் , டெல்லி கணேஷ், ஆரி,சோனா.எபி குஞ்சிமோகன், மன்சுருளி காண், ஜகுவார் தங்கம் ,ராமச்சதிரன், R.K.சுரேஷ் ,நித்தின் சத்திய,ரித்திவிகா மற்றும் பலர் .

மேலும் உறுபினர்களாக உள்ள மலையாள நட்கர் நடிகைகள்

ஜோஷ் , சீமா,வனிதா கிரிஸ்ஷ்ணச்சந்திரன், மேனகா சுரேஷ்,ரஞ்சினி, சபித ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்