2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன – மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் செளத்ரி

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 24 (1)-ன் கீழ் நவம்பர் 10, 2016 6 அன்று 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்…

மாநிலங்களவைக்கு தலைமை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் எஸ். பாங்னான் கொன்யாக்

வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக, மாநிலங்களவைக்கு நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் திருமதி பாங்னான் கொன்யாக் இன்று (25.07.2023) அவைக்குத் தலைமை தாங்கினார். முன்னதாக ஜூலை 17, 2023 அன்று துணைத் தலைவர்கள்…

ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு (டாப்ஸ்) திட்டத்தின் கீழ் 103 விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 ஹாக்கி அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) முக்கிய குழுக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன

ஒலிம்பிக் / பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்களை உறுதி செய்வதற்கும், இந்த நிகழ்வுகளில் நமது விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…

இணைய தளக் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைள்

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி காவல்துறை மற்றும் பொது சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதளக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத்…

மல்லாகம்ப், களரிப்பயட்டு, கட்கா, தங்-டா, சிலம்பம், யோகாசனம் ஆகிய விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2016 முதல் ‘கேலோ இந்தியா – விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்ற மத்திய துறை திட்டத்தை நடத்துகிறது. ‘கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்’ இதன்  ஒரு துணைக் கூறாகும்.…

இந்தியாவில் பேரழிவு அபாயத் தணிப்புக்கு நிதியளிக்கும் முறையை நாங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளோம்

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பிரமோத் குமார் மிஸ்ரா, சென்னையில் இன்று நடைபெற்ற ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.  …

ஒவ்வொரு மருத்துவரும் பொதுவான பெயர்களைக் கொண்ட மருந்துகளை தெளிவாகவும், பெரிய எழுத்துக்களிலும் பரிந்துரைக்க வேண்டும் – இந்திய மருத்துவக் கவுன்சில்

பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) கீழ் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி கேந்திராக்கள் (பிஎம்பிஜேகே) மூலம் விற்பனை செய்யப்படும் பொதுவான மருந்துகளை சாமானியர்களுக்கு அணுகுவதை…

கிராமப்புறங்களில் வேளாண் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள்

மத்திய அரசின் வேளாண் துறை, 2018-19 முதல் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (ஆர்.கே.வி.ஒய்) திட்டத்தின் கீழ் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாடடுத் திட்டத்தை…

வேலை வாய்ப்பு திருவிழா மூலம், அரசுத் துறைகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை ஜூலை 22 அன்று பிரதமர் வழங்குகிறார்

மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி  அளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன.  ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன.