தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கருணாநிதி கண்டனம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோடியக்கரை அருகே 18-8-2012 அன்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் நிலைகுலைந்து போய் கதறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த…
டிவி சேனல் தொடங்கப் போகும் சக்சேனா

சன் தொலைக்காட்சி மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் முன்னாள் தலைமை அதிகாரியான ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தற்போது சாக்ஸ் பிக்சர் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் அவர் விரைவில் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கப் போகிறார். கடந்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மனிதராக விலங்கிய ஹன்ஸ்ராஜ் சக்சேனா,…
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த பேரரசு

மசாலா படங்களுக்கு பேர்போனவரான இயக்குநர் பேரரசு, இயக்கத்துடன் பாடல்களும் எழுதி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். பரத், சுனைனாவை வைத்து ‘திருத்தணி’ படத்தை இயக்கியிருக்கும் பேரரசு, அப்படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். ‘திருத்தணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 19) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள்…
தைபூன் சூறாவளி: வியட்நாமில் 27 பேர் பலி

வியட்நாமின் வடக்கு பகுதியில் கை டாக் என்று பெயரிடப்பட்ட தைபூன் சூறாவளி கடுமையாக தாக்கியது. சீனாவிலிருந்த வந்த இந்த கடுமையான சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த மழைக்கு அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 27 ஆக உயர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில்…
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் கடும் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் பப்புவா நியூகினியா நாடு உள்ளது. இது தீவுகள் அடங்கியது. இன்று காலை (ஆக.20) அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
வழக்கு, சிறை: அஞ்சமாட்டேன், விஜயகாந்த்

ஆட்சியில் உள்ள குறைகளை கூறினால் என் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது; வழக்கு, சிறை எதற்கும் நான் அஞ்சமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
தமிழிக்கு வரும் நந்தி விருது பெற்ற மேஸ்திரி

ஆந்திர மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருது பெற்ற ‘மேஸ்திரி’ திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ‘மேஸ்திரி’ என்ற தலைப்பில் வெளியாகும் இப்படத்தை குரு பிரம்மா ஆர்ட்ஸ் தயாரிக்க, இயக்குநர் தாசரி நாராயணராவ் கதை, திரைக்கதை எழுத, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஜாதி வேறுபாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் டாக்டர் தாசரி…
மயிலாடுதுறை அருகே 300 பவுன் நகை கொள்ளை

மயிலாடுதுறை அருகே ஜுவல்லரி மற்றும் அடகு கடையில் 300 பவுன் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்றது. இந்த கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை அருகே 300 பவுன் நகை கொள்ளை நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் மேல…
மகாராஷ்ட்ராவில் கடலில் மூழ்கி ஏழு பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் கன்பட்புலே என்னும் கடற்கரை உள்ளது. சோலாப்பூர் மற்றும் தானே பகுதியிலிருந்த சுற்றலா வந்த ஏழு பேர் அங்குள்ள கடற்கரையில் குளித்திருக்கிறார்கள். அப்போது கடுமையான கடல் நீரோட்டப்பகுதிக்கு சென்ற அவர்கள் அதில் சிக்கி கடலின் ஆழமான பகுதிக்கு சென்று காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் இறந்தவர்களில் ஐவரின் உடல்கள் கரையோரம்…
மெகந்தியால் அலர்ஜி: வதந்தியால் இரவு முழுவதும் பரபரப்பு

செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்து கொண்டனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக நேற்று இரவு தகவல் பரவியது. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணிக்கு சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த  சில பெண்கள் மருத்துவமனைக்கு…