புதிய வண்ணாரப்பேட்டையில் யமாஹா விற்பனை மையம் துவக்கம்

SVD Group யமாஹா விற்பனையகத்தைத் தொடங்கியிருப்பதன் மூலம் ஆட்டோமொபைல் துறையிலும் வெற்றிகரமாக கால்பதித்துள்ளது.  இது குறித்து வால்ட்டர் ஃபிலிப் ஜெயச்சந்திரன் – இயக்குனர் எஸ் வி டி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டட் கூறும் போது,“பெருகி வரும் இரண்டு சக்கர வாகனத்தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டும்வடசென்னை மக்கள் சுலபமாக இரண்டு சக்கர வாகனங்களைக் குறிப்பாக இளைஞர்களின் ஃபேவரைட்டாகத்…
திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாள் முதல்வர் மரியாதை

திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாள் முதல்வர் மரியாதை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நேற்று தலைமைசெயலகத்தில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர்துவி மரியாதை மற்றும் தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி ஏற்க்கபட்டது.
கரும்பு மெட்ரிக் டன் ஒன்றிற்கு 2,350 ரூபாய் முதல்வர் உத்தரவு

திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின் கீழ், சாகுபடி பரப்பை அதிகரித்தல்; பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் பயிர் மேலாண்மையை கடைபிடித்தல்; துல்லிய பண்ணையம் முறையில் காய்கறிகளை பயிரிடுதல்; தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவு என பல புதிய முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. நுண்ணீர்ப் பாசனத்தை பெருக்கும் வகையில், சிறு…
சேலம் மாவட்டம், தளவாய் பட்டியில் கலை பண்பாட்டு மையம் முதல்வர் உத்தரவு

தமிழக பண்டைய கலைகளான இயல், இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தையும் நன்கு பராமரித்து, காப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம், தளவாய் பட்டியில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் சேலம் மண்டலத்திற்கான மண்டல…
150 திரையரங்குகளில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரிலீஸ்

காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று மசாலாப் படங்கள் வரிசைக்கட்டும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாமான முறையில் சில படங்கள் வெளியாவதுண்டு. அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.’ தலைப்பைப் போலவே படமும் ரொம்ப வித்தியாசமானதுதான். புதுமுக இயக்குநர் பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பீட்சா’ உள்ளிட்டப் படங்களில் நடித்த…
ஏர்டெல்லின் புதிய சலுகை

உலக அளவில் தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், ஆப்பிரிக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள், தென் ஆசிய நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருக்கும் போது அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம்…
புதிய தலைமுறை டிவி செய்தியாளர் தற்கொலை

புதிய தலைமுறை தொலைக்காட்ச்சியில் நிருபராக பணியாற்றியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், வணிக நிருபராக பணியாற்றியவர் நெடுஞ்செழியன். ஆறு மாதத்துக்கு முன்பு திருமணமான இவர் பூந்தமல்லியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். தலை தீபாவளியன்று சொந்த ஊருக்கு சென்று இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார்.…
துள்ளி விளையாடு படத்திற்காக காத்திருக்கிறேன் தீப்தி

வின்சென்ட் செல்வா  ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’  என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார். படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியும் நடிக்கின்றனர்.. குறிப்பாக தீப்தி, பட்டாளம் படத்தில் அறிமுகமாகி, எங்கேயும் எப்போதும் படத்தில் உருக்கமான…
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 406 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 521ரன்களைக் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது. இந்தியாவின் புஜாரா…
தமிழகத்தை ஆரோக்கியம் நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தை   ஆரோக்கியம் நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில், நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும், மருத்துவ வசதி கிடைக்கச்  செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை…