மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக பல சிறப்புத் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி ஆணையிட்டு 89381 நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை ஷதூவிச்லி இந்த ஆண்டில் ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாநில / மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெறும், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசினை உயர்த்தி, உயர்கல்விபெற உதவித்தொகையும் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

2011-2012ஆம் ஆண்டில் பார்வை குறைபாடுடைய 6 வயதிற்குட்பட்ட மாற்று திறனாளி சிறார்களுக்கு, 20 புதிய ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், 20 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு
திருமண உதவித்தொகை ரூ. 50000/- த்துடன் கூடுதலாக மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும்அனைவருக்கும் திருமண உதவித்தொகை கிடைக்கும் வகையில் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இரு கால்களும் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள், சுயவேலை புரிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு 2011-2012 ஆம் ஆண்டு முதல் விலையில்லா 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் விலையில்லா காதொலிக் கருவிகள் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

23 அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 1720 மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் 4 இணை சீருடைகள் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர உணவு மான்யம் ரூபாய் 450 லிருந்து ரூபாய் 650 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் ஒரு துணையாளருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை வழங்கப்படுகிறது. பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை ஒரு தேர்வு தாளுக்கு ரூ.100/- லிருந்து ரூ. 250/- ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளி படிப்பை இடை நிறுத்தம் செய்யாமல் இருக்க ஊக்கத் தொகையாக 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம் , 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 2000ம் வழங்கப்படுகிறது.

மேலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் 5000 பயனாளிகளுக்கு வழங்க ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. குறைந்த பார்வை திறனுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாடநூல்களின் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்க உதவும் கருவி (Magnifier) ரூபாய் 50 லட்சம் செலவில் 500 மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கை, கால் இழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன செயற்கை அவயம் வழங்க ரூபாய் 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்    மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது .

சிறப்பு பள்ளிகளில் +2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணிணியுடன், பேசும் மென்பொருள் வழங்கவும் அரசு ஆணையிட்டு, வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 மாற்றுத் திறனாளிகள் தொழிற் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பணிநியமனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  325 நபர்களை தேர்வு செய்துள்ளது. இதில் 190 நபர்கள் பார்வையற்றவர்கள் ஆவார்கள். இவ்வாறு, தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26.11.2012 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர்களை 26.11.2012 அன்று நேரில் சந்தித்தும், மேலும் 28.11.2012 அன்று செயலர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் சங்க பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்கள்  சந்தித்தும், கோரிக்கைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். போராட்டத்தை கை விடுவதாகக் கூறிச் சென்ற இந்த சங்கப் பிரதிநிதிகள், மீண்டும் போராட்டம் நடத்தி, பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, அரசுக்கு  ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Share This Post