மெகந்தியால் அலர்ஜி: வதந்தியால் இரவு முழுவதும் பரபரப்பு

மெகந்தியால் அலர்ஜி: வதந்தியால் இரவு முழுவதும் பரபரப்பு

செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்து கொண்டனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக நேற்று இரவு தகவல் பரவியது.

இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணிக்கு சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த  சில பெண்கள் மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்றதாகவும், இதில் ஒரு பெண்ணுக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி வைத்ததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிலர் முன்னெச்சரிக்கையாகவும் சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Post