கமலை மீண்டும் மீண்டும் மிரட்டும் திமுக

கமலை மீண்டும் மீண்டும் மிரட்டும் திமுக

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமீபத்திய தேர்தல் பிரச்சார விடீயோவில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக என ஒரு கட்சியையும் விடாமல் சாடியிருந்தார். ஆனால் மற்ற கட்சிகளெல்லாம் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்க, திமுக மட்டும் வானத்துக்கு பூமிக்கும் குதித்து கொண்டிருக்கிறது.

“ஸ்டாலின் பேச்ச கேட்டதும் டிவியை உடைக்கிறார் கமல். தமிழகத்தில் என்ன அவர் வன்முறையை தூண்டுகிறாரா…?” என்று யாருக்கும் தோன்றாத ஒரு ஆங்கிளை பிடித்து சொந்த கட்சியின் தலைவரையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகரும் திமுக பிரமுகருமான வாகை சந்திரசேகர்.

அதோடு நிற்காமல், “ஸ்டாலினை விமர்சனம் செய்யும் கமல், சீமான் போன்றோர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், நாங்களும் உங்களைபோல் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள்,” என்றூ பொங்கியுள்ளார். இதற்கு மநீமவினரும், நாம் தமிழ்ர் கட்சியை சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் சந்திரசேகருக்கு பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர்.

சந்திரசேகர் கமலை மிரட்டும் தொனியில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கமலை அர்ச்சித்த சந்திரசேகர், “ஜெயலலிதா இருந்தபோது பேச வக்கில்லாமல் அவர் இறந்தவுடன் விஸ்வரூபம் எடுக்கும் கமலின் மேக்கப் மக்கள் முன் கலைந்து விட்டது,” என்று விமர்சனம் செய்தார். 

மேலும் அவர், “வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனக்கான விளம்பரம் தேடிக் கொள்வதற்காக திமுக நோக்கி விமர்சனம் செய்வது அவரது அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப் பேசுகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, அவதூறுச் சேற்றை கையில் அள்ளி முகத்தில் பூசி, புது மேக்கப் போடுகிறார் கமல். இனி அவர் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடப் போவதில்லை,” என்று தெரிவித்தார்.

Share This Post