தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து இல்லை, மறுபடியும் மக்கள் மனதை புண்படுத்திய ஸ்டாலின்

தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து இல்லை, மறுபடியும் மக்கள் மனதை புண்படுத்திய ஸ்டாலின்

ரம்ஜானுக்கு வாழ்த்து உண்டு, கிறிஸ்துமசுக்கு கட்டாயம் உண்டு, ஆனால் இந்து பண்டிகைகள் எதற்கும் வாயைத் திறக்க மாட்டோம், அவை எல்லாம் விடுமுறை தினங்கள், அவ்வளவே என்று இத்தனை நாள் மக்களின் உணர்வினை புண்படுத்திய திமுக தலைவர் மு க ஸ்டாலின், இந்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை.

“எங்களுக்கு தமிழ் புத்தாண்டு பொங்கல் அன்று தான், இன்று இல்லை,” என திமுகவினர் என்ன தான் சப்பைக்கட்டு கட்டினாலும், அட் லீஸ்ட் ‘சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்’ என்றாவது சொல்லி இருக்கலாமே. தமிழ் புத்தாண்டுக்கு கூட வாழ்த்து சொல்லாத நீங்கள் தமிழ் மானத்தை காப்போம் எனத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது சிரிப்பாகவும் கடுப்பாகவும் இருக்கிறது என்கிறார்கள் மக்கள்.

மேலும், உங்களால் ஏதாவது காரணம் சொல்லி உங்கள் இஷ்டத்திற்கு கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளின் தேதிகளை மாற்ற முடியுமா? உண்மையான தமிழர்களான இந்துக்கள் இனியும் இளிச்சவாயர்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி ஒரு மதத்திற்கு, அதுவும் இந்த மண்ணின் தாய் மதத்திற்கு எதிராகவே எப்போதும் இருப்பது தான் மதச் சார்பற்ற‌ கூட்டணியா என்று கேள்வி கேட்கும் வாக்காளர்கள், இந்த தேர்தலில் நாங்கள் உங்களை மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இல்லை என்கின்றனர்.
இந்நிலையில் டிவிட்டரில் இன்று மாலை பதிவிட்ட ஸ்டாலின், “சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி குடியாத்தம், சோளிங்கர்  தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். மக்கள் தருகிற ஆதரவும், எழுச்சியும் நிச்சயம் ஏப்ரல் 18-ல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரதிபலிக்கும்!” என்று கூறி ஒரு விடீயோவையும் போட்டுள்ளார்.

அம்பேத்கருக்கு மரியாதை செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு அவர் இன்று செய்துள்ள அவமரியாதை தான் மிகப்பெரிய தவறு. நிச்சயம் ஏப்ரல் 18‍ல் இது பிரதிபலிக்கும், ஸ்டாலின்.

Share This Post