அரசியலுக்குள் நுழைந்த தல, தளபதி தகராறு: எடப்பாடி பற்ற வைத்த நெருப்பு

அரசியலுக்குள் நுழைந்த தல, தளபதி தகராறு: எடப்பாடி பற்ற வைத்த நெருப்பு

இந்த தேர்தலை பொறுத்த வரை பிரச்சார ஸ்டார் என்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பம்பரமாய் தமிழகம் முழுக்க சுற்றி வரும் ஈபிஎஸ், தன் தெளிவான பேச்சு, கண்ணியமான அணுகுமுறை மற்றும் எதிரிகளை நோக்கி வீசும் வார்த்தை வீச்சுகளால் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருகிறார்.

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய அவர், இப்போதுக்கு கட்சியினரால் தளபதி என்று அழைக்கப்படும் ஸ்டாலினுக்கு புது குடைச்சலைக் கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு எப்போதோ முன்மொழிந்திருந்தாலும், இதுவரை அதற்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் பெரிதாக ஒத்துக் கொள்ளவில்லை. இதை கெட்டியாக பிடித்து கொண்டுள்ள எடப்பாடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தலையில்லாத உடம்பு போன்றது என தேனி பொதுக்கூட்டத்தில் பேசி விமர்சனம் செய்தார். 

பிரதமர் முன்னிலையில் பேசிய முதல்வர், “தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது. நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது. 

செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கிறார்கள். ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை” என்று பேசினார்.

துணை முதல்வர் ஓ பன்னீர்சசெல்வம் பேசும்போது, மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது என்றும், தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் சொன்னார்.

Share This Post