வயநாடா, வயாகரா நாடா? காங்கிரசாரின் கும்மாளங்கள்

வயநாடா, வயாகரா நாடா? காங்கிரசாரின் கும்மாளங்கள்

ராகுல் காந்தியை வயநாடு தொகுதியின் காங்கிரசின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்த தினத்திலிருந்தே, தேர்தல் வேலை செய்கிறோம் என்னும் பேரில் நாடெங்கிலும் இருந்து வந்து இறங்கி இருக்கும் கட்சியினர் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லையாம்.

சுற்றுலாத் தளமான வயநாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து விடுதிகளையும் புக் செய்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அங்கு குடி, குட்டி என ஒரே கும்மாளம் அடித்து வருகிறார்களாம். கோடை காலமாக வேறு இருப்பதால், அங்கு வந்துள்ளவர்களுக்கு அந்த இடத்தை விட்டுப் போகவே மனது வரவில்லையாம்.

இதனால், சுற்றுலா பயணிகள், விடுதி ஓனர்கள் மட்டுமில்லாது, அங்கு வாழும் மக்களும் முகம் சுளிக்கிறார்களாம். காங்கிரஸ் எதிர்கட்சியாக உள்ள போதே இப்படி இருக்கிறார்கள். ஆளும் கட்சி ஆனால் என்ன ஆகுமோ என அச்சப்படுகிறார்களாம்.

இதற்கிடையே, கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். 17-ந்தேதி முழுவதும் ராகுல் தனது வயநாடு தொகுதியில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அன்று காலை முதல் இரவு வரை வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார்.

ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பேகேரா உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமேதி தொகுதியில் மனு தாக்கல் செய்ய சென்றபோது ராகுல் தலை மீது 7 தடவை லேசர் கதிர்வீச்சு குறியீடு காணப்பட்டது.

பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த லேசர் மூலம் நீண்ட தொலைவில் இருந்து ராகுலை சுட்டுக்கொல்ல முயற்சிகள் நடந்து இருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்திய உள் துறைக்கு கடிதம் அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ராகுலுக்கு 16, 17-ந்தேதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share This Post