நல்லா இருந்த ஊரும் நாலு திமுக வேட்பாளர்களும்

நல்லா இருந்த ஊரும் நாலு திமுக வேட்பாளர்களும்

நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மே 19ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு அதிமுகவை முந்திக்கொண்டு தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆசைப்பட்டதில் தவறேதும் இல்லை தான். ஆனால் அவர் யாரை களமிறக்கி இருக்கிறார் என்பதில் தான் மேட்டரே இருக்கிறது.

சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம் தொகுதியில் எம் சி சண்முகய்யா மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் திமுக வேட்பளார்களால் ஸ்டாலினால்  அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் சண்முகய்யாவைத் தவிர மிச்சமிருக்கும் மூன்று பேருக்கும் தங்கள் தொகுதிகளில் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறதாம். என்ன தான் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் டப்பு பார்ட்டிகளாய் இவர்கள் இருந்தாலும் கட்சி பிரமுகர்களிடையே இருக்கும் அதிருப்தியால் கரையேறுவது கடினம் என்கிறார்கள்.

அதுவும், செந்தில் பாலாஜி கட்சியில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. அவரை விட்டால் அரவக்குறிச்சிக்கு திமுகவின் வேறு ஆளா இல்லை என்று ஆதங்கத்துடன் கேட்கின்றனர் அந்த ஏரியாவில் உள்ள உடன்பிறப்புகள். கட்சி தலைமைக்கும் தங்கள் குமுறல்களை தெரியப்படுத்தப் போவதாக சொல்லி வருகின்றனர்.

காங்கிரஸ் ஜமீந்தார்களின் கட்சி. அங்கே குறிப்பிட்ட பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் வளர முடியாது என ஆரம்பிக்கப்பட கட்சி தான் திமுக. இப்போது அதே காங்கிரசோடு கூட்டு சேர்ந்ததோடு மட்டுமில்லாமல் அதே போல் ஜமீந்தார்களின் கட்சியாகவும் ஆனது தான் காலத்தின் கொடுமை.

Share This Post