காங்கிரஸ், திமுகவுக்கு மோடியின் புதிய ஆப்பு

காங்கிரஸ், திமுகவுக்கு மோடியின் புதிய ஆப்பு

இன்று தமிழகத்தில் தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கும் அதன் தமிழக பார்ட்னரான திமுகவிற்கும் நன்றாகவே சூடு வைத்தார்.

இரண்டு கட்சிகளும் வாரிசுகளால் வாரிசுகளுக்காக நடத்தப்படுவதையும், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு உண்டாகியிருப்பதையும் நன்றாக புரிந்து வைத்திருக்கும் பிரதமர், அதை தன் பேச்சில் ஹைலைட் செய்தார். இது அங்கு கூடி இருந்த மக்களிடையிலும் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களிடையிலும் நன்றாகவே ஒர்க் அவுக் ஆனது.

“நாடும் நமதே, நாற்பதும் நமதே. காங்கிரசும் திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என கூறுகிறார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை.  காங்கிரஸ்- திமுக கூட்டணியை  பொருத்தவரை சிறுபிள்ளை தனமாக செயல்படுகின்றனர்,” என்று மோடி சொன்னார்.

“தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும், என்று கூறிய பிரதமர், “வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது,” என்று மேலும் போட்டுத் தாக்கினார்.

“நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா,” என்றும் அவர் சொன்னார்.

Share This Post