பதில் சொல்லுங்கள் திக வீரமணி: தமிழ் இந்துக்களின் நியாயமான கேள்விகள்

பதில் சொல்லுங்கள் திக வீரமணி: தமிழ் இந்துக்களின் நியாயமான கேள்விகள்

பகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

சாட்டையடியாய் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சுளீர் ரகம். இவைகளை எல்லாம் படித்த பின்னாவது திமுகவிற்கு ஓட்டு போடும் இந்துக்கள் மாறுவார்களா என்று கேட்கிறார் இராம. இரவிக்குமார், நிறுவனதலைவர், இந்து தமிழர் கட்சி.

“1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

3. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

4. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

5. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

6. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈவெரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா?

7. இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிரீர்களா ? 

8. நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள்,ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள்  பங்கு எவ்வளவு சதவிகிதம்,  பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியளிடும் துனிவுஇருக்கிரதா ?

9. இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிறித்தாள‌ நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் பேச நடுங்குவ‌தேன்? 

10. சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?

11. உங்கள் மனைவிகளை பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?

12. இந்துக்கள்  உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா? 

13. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா? 

14. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

15. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா? 

16. காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

17. ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா? 

18. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

19. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.

20. காஞ்சி சங்கரமடத்தில்  சங்கராச்சாரியாராக தாழ்த்தப்பட்ட ஒருவரை மடாதிபதியாக நியமிப்பார்கள் என்று கேள்வி எழுப்பக் கூடிய உங்களால் மதுரை ஆதீன மடத்தில் சைவப்பிள்ளை தவிர்த்த ஒருவரை மதுரை ஆதீனமாக நியமிக்கக்கோரி போராட்டம் நடத்த தைரியம் உண்டா?

21. தங்களை அரிசன‌ ஆதரவாளராக காட்டிக்கொள்ள பகல் வேஷம் போடக்கூடிய பகட்டு காரர்களே உங்கள் திராவிடர் கழகத்தினுடைய தலைவராக இதுவரை தாழ்த்தப்பட்ட ஒருவரை நியமிக்காதது ஏன்?

22. பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு குஞ்சுகளே மேடைதோறும் பெரியார் கொள்கை பேசும் பெரியாரின் பித்தர்களே தங்கள் மனைவிமார்களின் கழுத்தில் இருக்கும் தாலி கூடாது என்று திமுக ஸ்டாலினிடம் உங்கள் தலைவர் மானமிகு வீரமணி வலியுறுத்தி வாரா?

23. பிள்ளையாரை உடைத்து மகிழ்ந்த இழி பிறவிகளை ஈ வெ ராமசாமி நாயக்கர் சிலை உடைக்கப்படும்போது கொதித்து எழும் கூப்பாடு போடுவதும் பகுத்தறிவுக்கு உகந்ததா?

24. வர்ணாசிரம தர்மம் அப்பன் செய்த தொழிலையே பிள்ளை செய்ய வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி தமிழர்களிடம் குழப்பம் விளைவிக்கும் திக வீரமணி அவர்களே உங்கள் மகனை திராவிடர் கழகத்தினுடைய அறங்காவலராக நியமித்தது மனுதர்மம் இல்லையா?

25. இந்து சாமியாரோ பூசாரியோ தவறு செய்துவிட்டால் மடங்களை இழுத்து மூடு என்று போராட்டம் நடத்திய உங்களால் பாலியல் பலாத்காரம் நடத்திய பாதிரிகளை கைது செய்யக்கோரி சபைகளில் இழுத்து மூட கோரி போராட்டம் நடத்தாதது ஏன்?

26. ஆணுக்கும் ஆணுக்கும் ஐயப்பன் பிறந்தார் என்று எங்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் கும்பலே கர்த்தர் எப்படிப் பிறந்தார் என்று கேள்வி கேட்க தைரியம் உண்டா?

27. வராக அவதாரம் எடுத்திருக்கும் பூவராக சுவாமி மலத்தை படையலாக வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பும் கிறுக்கர்கள் ஈவே ராமசாமி நாயக்கரின் சிலைக்கு ரோசாப்பூ மாலை அணிவித்து மலத்தை படையலாக வைக்க நீங்கள் தயாரா?

28. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி கொண்டது போல ஈவேரா சேர்த்த சொத்துக்களை ஆட்டையைப் போடும் நோக்கில் செயல்படும் வீரமணி தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த அறப்பணிகள் என்ன?

29. அழுகின்ற பிள்ளைக்கு பால் இல்லை அபிஷேகத்திற்கு கல்லுக்கு பால் தேவையா என்று கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளே கோடிக்கணக்கான ரூபாயில் பெரியாருக்கு திருச்சிக்கு அருகில் சிலை திறக்க வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னியா?

30. சிலைகளை வணங்கும் இந்துக்களை தமிழர்களை காட்டுமிராண்டி என்று அழைக்கும் நீங்கள் அண்ணாதுரை சிலையையும் ஈவேரா சிலையையும் வணங்கக்கூடிய உங்களை காட்டுமிராண்டிகள் என்று அழைக்கலாமா?

31. கோயில் கட்டுவது நம்ம ஆளு மணி அடிப்பது அவாள் என்று ஏளனம் பேசுகிறீர்களே லட்சக்கணக்கான கோவில் வழிபாடு இல்லாமல் ஒருவேளை விளக்கு போட கதை இல்லாமல் இருக்கிறது நீங்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக அர்ச்சகராக மணியாட்ட தயாரா?

Share This Post