மோடிக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா?

பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு வாலிபரை குஷ்பு அறையும் காட்சி வைரலாகி வருகிறது. பல பேரும் குஷ்புவின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில், ஒரு கேள்வியையும் கேட்கத் தவறவில்லை.

அதாவது, புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த போதும், இந்திய விமான படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்த போதும் ஆன்லைனில் அட்வைஸ் மழை பொழிந்த குஷ்பு, பாரத பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பாடம் படிக்க வேண்டும் என்ற ரேஞ்சில் பேசியிருந்தார்.

மேலும், எதையும் சட்டப்படி தான் அணுக வேண்டும், அதிரடி மற்றும் அடிதடி கூடாது என்றும் சொல்லியிருந்தாராம். இதையெல்லாம் இப்போது சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை மட்டும் குஷ்பு எப்படி அடிக்கலாம்? அமைதி முறையிலும், சட்டப்படியும் ஹேண்டில் செய்ய வேண்டியது தானே எனக் கேட்கின்றனர்.

அப்படி சொன்னதோடு மட்டுமில்லாமல், குஷ்பு செய்தது சரி என்றே கூறும் அவர்கள், அதே போல் மோடி தாக்குதல் நடத்த உத்திரவிட்டதும், அபிநந்தன் விடுதலைக்கு கையாண்ட முயற்சிகளும் கூட மிகச் சரியே என்கின்றனர். மோடிக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து குஷ்பு நேற்று பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய குஷ்பு தனது காரை நோக்கி நடந்தார். அப்போது ஒருவர் குஷ்புவை தவறாகத் தீண்டியதால் ஆத்திரமடைந்த அவர், அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Share This Post