நானும் ரவுடி தான்: வான்ட்டடாய் வந்து வண்டியில் ஏறும் வைகோ

நானும் ரவுடி தான்: வான்ட்டடாய் வந்து வண்டியில் ஏறும் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்களையும், வடிவேலுவின் காமெடிகளையும் இணைத்து எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் தகும் போல. அப்படி அள்ள அள்ளக் குறையாத அரசியல் வைகை புயலாய் இருக்கிறார் அண்ணன் வைகோ.
இந்த தேர்தலுக்குள் தான் ஏதாவது சர்ச்சையில் சிக்க‌ வேண்டும், இதானல் காவல் துறை தன்னை கைது செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் வழக்காவது போட வேண்டும் என குறி வைத்து செயல்படுவதாக உள்ளது வைகோவின் செயல்பாடுகள் என அவர் கட்சியில் உள்ள சிலரே கூறுகின்றனர்.

ஆனால், என்ன தான் வைகோ தம் கட்டி பேசி வந்தாலும், கை வலிக்க அறிக்கை எழுதி வெளியிட்டாலும், அதை காவல் துறையும் மீடியாவும் கண்டுகொள்வதே இல்லையாம். அவ்வளவு ஏன், மீம் கிரியேட்டர்கள் கூட இப்போதெல்லாம் வேறு ஏதாவது வெயிட்டான கன்ட்டென்ட் தேடி போய் விடுகிறார்களாம்.

இப்படித் தான் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூட்டத்தில் அடிதடி ஆனவுடன் அறிக்கை வெளியிட்ட வைகோ, அதில் தனது வீரத்தையும், ஃபீலிங்க்சையும் ஏராளத்திற்கு அள்ளிக் கொட்டியிருந்தார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. சில செய்தித் தாள்களில் மட்டும், அதுவும் சிங்கிள் காலமாக வந்திருந்ததாம்.

அதனால், ‘எத்தனை கெட் அப் போட்டாலும் நம்மை கண்டுபிடிச்சிடறாங்களே, அப்புறம் அந்த கெட் அப்புக்கு என்ன தான் மரியாதை’ எனும் ரேஞ்சில் வைகோ நிலைமை இருக்கிறதாம். எத்தனை கெட் அப் போட்டால் என்ன, கொண்டையை மறைங்க சார் முதல்ல. 

Share This Post