குறிவைக்கப்படும் பாஜகவினரின் ஃபேஸ்புக், பின்னணியில் திமுக?

குறிவைக்கப்படும் பாஜகவினரின் ஃபேஸ்புக், பின்னணியில் திமுக?

மூத்த தலைவர்கள் சி பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, கிட்டத்தட்ட 2000 பாஜகவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ளது திமுக தான் என அடித்து சொல்கிறார்கள் பா ஜனதாவினர்.

இதைப் பற்றி கூறும் தமிழக பாஜக சமூக ஊடகப் பிரிவின் தலைவர் நிர்மல் குமார், “நாங்கள் திமுகவின் இரட்டை வேட‌த்தை பல விஷயங்களில் தோலுரித்துக் காட்டுவதாலும், பாஜகவிற்கு சாதகமான அம்சங்களை சோசியல் மீடியாவில் பரப்புவதாலும் கடுப்படைந்த திமுகவினர் எங்களை பற்றி தவறாக புகார் பதிவு செய்து ஃபேஸ்புக் பக்கங்களை முடக்கி விட்டனர். 

நாங்கள் ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு உண்மையை விளக்கிக் கூறி எங்கள் அக்கவுன்ட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உயிர்ப்பித்து வருகிறோம். இதற்கு சிலது காலம் பிடிப்பதாலும் அதற்குள் தேர்தல் முடிந்து விடலாம் என்பதாலும் புதிய அக்கவுன்ட்டுகளையும் உருவாக்கி வருகிறோம்,” என்கிறார்.

பாஜகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதிகளான கன்னியாகுமரி மற்றும் கோவையில் தான் அதிக அளவில் பாரதிய ஜனதாவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே எதிர் அணியில் சிறப்பு குழுக்கள் இயங்குவதாக தெரிகிறது.

“நாங்கள் எங்கள் பாட்டுக்கு சமூக வலைதள பிரச்சாரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். நேருக்கு நேர் போட்டி என்றால் சந்திப்பதற்கு களத்திலும் நாங்கள் தயார், சோசியல் மீடியாவிலும் தயார். ஆனால் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல,” என்றார் நிர்மல்.

Share This Post