விஷத்தை கக்கும் விளம்பரங்கள்: கோடிகளில் செலவு செய்யும் திமுக, எப்படி வந்தது இவ்வளவு பணம்?

விஷத்தை கக்கும் விளம்பரங்கள்: கோடிகளில் செலவு செய்யும் திமுக, எப்படி வந்தது இவ்வளவு பணம்?

தமிழகத்தில் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இன்டெர்நெட், சோசியல் மீடியா என்று ஒன்று விடாமல் எங்கும் எதிலும் திமுக விளம்பரங்கள் தான். அதுவும், வெறுப்பைக் கக்கும் வகையிலும் அவநம்பிக்கையை விதைக்கும் வகையிலும் நெகடிவ் விளம்பரங்கள். இதற்கு மட்டும் ரூ 100 கோடிக்கு மேல் திமுக ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவல்.

அதுவும், இந்த 100 கோடியும் தேர்தல் ஆணையத்தின் கணக்கில் வராது எனக் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல், இன்னும் வேறு பல வகைகளிலும் திமுக வெற்றி பெறுவதற்காக பணத்தை தண்ணீராய் இறைத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படி வந்தது இவ்வளவு பணம்?

இந்த கேள்விக்கு பதில் கூறிய விவரம் அறிந்தவர்கள்: ‘திமுக போன்ற கட்சிகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பணத்தை சம்பாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். இருக்கவே இருக்கிறது பல ரூட்டுகளூம் பணம் காய்ச்சி மரங்களும். அப்புறம் என்ன கவலை’ என்கிறார்கள்.

இதற்கைடையே, ஏற்கனவே அழுமூஞ்சி சீரியல்களால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள், திமுகவின் விளம்பரங்கள் இன்னும் கடுப்பை வரவைப்பதாக கூறுகின்றனர். ‘தங்களால் என்ன செய்ய முடியும் என சொல்லாமல், பல கோர சம்பவங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தே திமுகவின் விளம்பரங்கள் வருகின்றன. இதனால், இருக்கிற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போகிறது,’ என்கிறார்கள்.

ஆனாலும் அசராத திமுக, தன்னுடைய ஊடக மற்றும் பண பலத்தால் அங்கிங்கெனாதபடி எங்கும் விளம்பரம் செய்து வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கவனிக்கிறதா என்றும் தெரியவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அமுதமே நஞ்சென்றால், அலப்பறைகள்…?

Share This Post