மீண்டும் மோடி, வேண்டும் மோடி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஒருமித்த குரல்

மீண்டும் மோடி, வேண்டும் மோடி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஒருமித்த குரல்

ஏதோ இந்தியாவிற்குள் தான் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்கிறது என எண்ண வேண்டாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மனங்களிலும் மோடி தான் கொடி கட்டி பறக்கிறார்.

மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என பல நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் முழு மூச்சாக கூறி வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வாழும் பிரபல இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷோபாஷாலினி.

தமிழரான இவர், தன்னுடைய பிசியான மருத்துவ சேவைகளுக்கு நடுவிலும் தாய்நாட்டுக்காக தனியே நேரம் ஒதுக்கி மோடி இதுவரை கொண்டு வந்த திட்டங்கள், அதனால் ஏற்பட்ட நன்மைகள், ஏன் மோடி தான் மறுபடி இந்தியாவை ஆள வேண்டும் போன்றவகளை பட்டியலிடுகிறார்.

‘எத்தனையோ ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்தியர்கள் வசிக்கும் போதும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி ஆட்சியில் தான் எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. இந்தியர்கள் என்று கர்வத்துடன் சொல்லிக் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணம், மோடியின் சாதனைகளும் செயல்களும் தான். அவர் தான் மீண்டும் பிரதமராக வேண்டும்,’ என சொல்கிறார் ஷோபாஷாலினி.

மோடி ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே மக்களுக்கு மேலும் பல நன்மைகளும், உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைகளும் கிடைக்கும் என சொல்லும் ஷோபாஷாலினி போன்றோர், பாஜகவின் வெற்றியே பாரதத்தின் வெற்றி என்கின்றனர்.

Share This Post