முதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர்

முதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர்

ஜெயலலிதா சிகிச்சை பற்றி பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியின் மறைவை பற்றி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பூகம்பத்தை கிளப்புவார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லையாம்.

யாருக்கும் தோன்றாத இப்படி ஒரு ஆங்கிள் முதல்வருக்கு தோன்றியுள்ளதை பார்த்து, அதிமுகவினர் உற்சாகமும், திமுகவினர் அப்செட்டும் ஆகியுள்ளனர். சில திமுகவினரோ, ஒரு வேளை ஈபிஎஸ் சொன்னதில் உண்மை இருக்குமோ, ஒழுங்கான சிகிச்சை கொடுத்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் கலைஞர் உயிரோடு இருந்திருப்பாரோ என கண்ணீர் மல்க கருத்து சொல்கின்றனர்.

இதனால் இப்போது தமிழக அரசியல் களமே ஈபிஎஸ் வெர்சஸ் எம்கேஎஸ் மோதிக் கொள்ளும் போர்களமாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவை பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்த பின்னும் ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதைப் பார்த்து கடுப்பான முதல்வர், தான் பதவிக்கு வரவேண்டுமென்று தன் தந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுக்காவலில் வைத்தவர் ஸ்டாலின் என்று ஒரே போடாக போட்டார்.

“கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலையே சிறைவைத்தவர் ஸ்டாலின். கலைஞருக்கு ஏன் பேசமுடியாமல் போனது? கலைஞரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்றால் அவர் குணமாகி இருப்பார் என்பதை அவரது கட்சி காரர்களே கூறுகின்றனர்.

முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு சில கொடுமைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது, இதனை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை” என்று பழனிசாமி பரபரப்பு பிரசாரம் செய்துள்ளார். இது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

Share This Post