திருமணத்துக்கு ஓகே சொன்னாரா திரிஷா?

திருமணத்துக்கு ஓகே சொன்னாரா திரிஷா?

கடந்த 16 வருடங்களா தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவுல கோலோச்சி வரும் திரிஷா, தன்னோட சக நடிகர்களோட கிசுகிசுக்கப்பட்டாலும், அவர்கள் எல்லாம் தன்னோட நண்பர்கள் தான்னு கொள்கை முடிவோட இருந்தார். 


இந்நிலையில சில வருடங்களுக்கு முன் அவருக்கு தொழிலதிபர் வருண் மணியன் கூட நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், யார் கண் பட்டதோ, அவர்கள் திருமணம் கருத்து வேறுபாடுகள் காரணாமாக‌ நிறுத்தப்பட்டது. அதிலிருந்து சினிமாவுல முழு மூச்சா மறுபடியும் கவனம் செலுத்திய திரிஷா, 96, பேட்டனு ஒரு பெரிய ரவுன்ட் வந்து இன்றும் முன்னணியில இருக்கார்.


சமீபத்துல, அவங்க அம்மாவோட நீண்ட நாள் ஆசையான தன்னோட திருமணத்துக்கு திரிஷா ஓகே சொல்லி இருப்பதா ஒரு தகவல் உலவுது. ஆனால் திருமணத்துக்கு பிறகும் தலைவி தொடர்ந்து நடிப்பாராம். யார் அந்த கொடுத்து வெச்ச ஜென்டில்மேன்னு தான் தெரியல.


திரிஷாவுக்கு இளம் நடிகர்களும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் ரசிகர்களா இருக்கறதும் குறிப்பிடத்தக்கது.

வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், சமீபத்துல தனக்கு பிடித்த நடிகையை பற்றி தெரிவித்திருந்தார். 
“சிறுவயதில் இருந்தே எனக்கு திரிஷாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இதுவரை அவரை சந்தித்தது கூட இல்லை.ஒருமுறை ப்ரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்”, என தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். 


திரிஷாவோட கடந்த வருடம் சூப்பர் ஹிட் படமான 96 தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 96. 
காதலை மய்யமாக கொண்ட இத்திரைப்படத்தில் திரிஷாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தை சமந்தா ஏற்று நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஷர்வானந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். 


இந்த படத்தில் பள்ளி கால காதலுக்கு பதிலாக கல்லூரி கால காதல் காட்சிகள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

Share This Post