பொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்!

பொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.

இது ஜனவரி 3 முதல் 14 வரை நடக்கிறது.

அங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அமைக்கப்பட்ட சுமார் 120 விற்பனை அரங்குகள் உள்ளன.

இங்குள்ள விற்பனை அரங்குகளில் ப்ளாக் பிரிண்ட் ட்ரஸ் மெட்டீரியல் , சூட்ஸ் , டாப்ஸ் . படுக்கை விரிப்புகள் , ராஜஸ்தான் சங்கனேரி புடவைகள் .மேற்கு வங்காள கனிதா வேலைப் பாடுகள் அமைந்த ஆடைகள் , காஷ்மீர் போர்வைகள் , கொல்கத்தா பலுசேரி புடவைகள் , சடடீஸ்கர் தஸ்ரா மட்கா புடவைகள் மற்றும் பட்டுப்புடவைகள் பெனாரஸ் ஜம்பானி , உ.பி பட்டுப் புடவைகள் ,போச்சம்பள்ளி புடவை கள் , தெலுங்கான் களம்காரி புடவைகள் ,மத்திய பிரதேஷ் மகேஸ்வரி புடவைகள் , பீகார் துணிகள் , குஜராத் பந்த்னி உடைகள் உள்ளிட்ட இந்திய அளவில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைத்தறி ஆடைகள் வந்து விற்பனைக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன .

ராஜஸ்தான் மரவேலைப்பாடுகள் , வண்ண சிலைகள் , லக்னோ ப்ரூ பாட்ரி , மணிப்பூர் கருங்கல் கலைப் பொருட்கள் , ஜோத்பூர் வெண்கல் கலைப் பொருட்கள் , வெண்கலப் பொருட்கள் மற்றும் சென்னை பாண்டிச்சேரி கலைப் பொருட்கள் , கைவினைப் பொருட்கள் , பேஷன் ஜூவல்லரி போன்று அனைத்தும் விற்பனைக்குக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.

” இவ்வளவு பெரிய வகை வகையான அரங்குகள் ஒரே இடத்தில் வேறு எங்கும் காண முடியாது. இது கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மக்களிடம் நம் பாரம்பரிய கலை வேலைப் பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்தியா வெங்கும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இது மூன்றாவது முறை நடக்கிறது. இன்னமும் கைத்தறியை நம்பியிருக்கும் மக்களும் கைவினைக் கலைஞர்களும் சிரமத்தில் தான் இருக்கிறார்கள் .இவ்வகைப் பொருள்களை வாங்குவது அவர்களை ஆதரிப்பதாகும் . கைத்தறி துணி வகைகளுக்கு 20 சதவிகிதமும் , கைவினை மற்றும் பேஷன் ஜூவல்லரி ரகங்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியும் அளிக்கப் படுகிறது. ” என்கிறார் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் மஹாவீர்.

Share This Post