சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்

1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வாண்டு
வடசென்னையில் மறைமுகமாக நடக்கும் குத்துச்சண்டையில் கலந்துகொள்ளும் குப்பைபொறுக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஹீரோ சிவகார்த்திக்கேயன் வெளியிட்டார்.

இயக்குனர் வாசன் ஷாஜியிடம் கேட்ட போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட பல ஹீரோக்களிடம் கேட்டோம். ஆனால் சூழ்நிலை சரியாக அவர்களுக்கு அமையவில்லை, அதனால் தயங்கினார்கள்.
ஆனால் வேலைக்காரன் படத்தின் டப்பிங் மற்றும் இயக்குனர் பொன்ராம் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டடிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் நான் கேட்ட உடனே ஓகே பிரதர் பண்ணிக்கலாம் என்று கூறினார் உடனே நான் மிகுந்த சந்தோஷத்தில் தள்ளப்பட்டேன் இந்த உதவியே படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.”இவ்வாறு வாண்டு படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜி கூறினார்.

Share This Post