அறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.!

அறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.!

எலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இப்போது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக 45 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.2,900) என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இந்த டெஸ்லா பவர் பேங்க் ஆனது யூஎஸ்பி, மைக்ரோ-யூஎஸ்பி, ஆப்பிள் லைட்னிங் மற்றும் அகற்றக்கூடிய இணைப்புகளுடன் வருகிறது. இதனை கொண்டு பல்வேறு வகையான சாதனங்களை சார்ஜ்ஸ் செய்ய முடியும். இது 3350எம்ஏஎச் திறன் கொண்ட ஒற்றை 18650 செல்தனை பயன்படுத்துகிறது.

இது டைப் எஸ் மற்றும் எக்ஸ் மின்சார வாகனங்களில் காணப்படும் ஒரு செல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்லா தளத்தில் பட்டியலின்படி, இந்த பவர் பேங்க் ஆனது டெஸ்லா டிசைன் ஸ்டுடியோவின் சூப்பர்சர்ஜர் நினைவுச்சின்னத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்லா பவர் பேங்கை வாங்கும் விருப்பம் கொண்டவராகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஷாப்.டெஸ்லா.காம் வலைத்தளத்திற்குள் நுழையலாம். மேலும் பல்வேறு வகையான தொழில்நுட்ப கருவி வெளியீடுகள், ஸ்மார்ட்போன் வெளியீடுகள் (அறிமுகம், அம்சங்கள், விலை நிர்ணயம் மற்றும் லீக்ஸ்) மற்றும் டெக் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

 

Share This Post