தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்

தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்

ஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்செல் பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

போட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான விலையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.104 கட்டணத்தில் நிமிடத்திற்கு 20 பைசா கட்டணத்தில் ஏர்செல் டூ ஏர்செல் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை டெல்லி வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றது.

ரூ.88 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 7 நாட்கள் ஆகும்.

ரூ.188 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 28 நாட்கள் ஆகும்.

புதிய திட்டங்கள் பெறுவதற்கு மை ஏர்செல் ஆப் அல்லது இணையம் மற்றும் ரீடெயிலர்களை அனுகலாம்.

Share This Post