ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை

ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை

ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை

கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், தொடர்ச்சியாக 7வது தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியா – நியூசிலாந்து அணிகளிடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், அடுத்து புனேவில் நடந்த போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கான 3வது மற்றும் கடைசி போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது.
இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித், தவான் களமிறங்கினர். தவான் 14 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் வில்லியம்சனிடம் பிடிபட்டார். நியூசி.க்கு எதிராக தொடர்ந்து 10வது போட்டியாக இந்திய தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்க்கத் தவறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரோகித்துடன் கேப்டன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்து மிரட்டியது. தனது 15வது சதத்தை நிறைவு செய்த ரோகித், 147 ரன் (138 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சான்ட்னர் பந்துவீச்சில் சவுத்தீயிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். கோஹ்லி 113 ரன் எடுத்து (106 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் டோனி 25, கேதார் ஜாதவ் 18 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 338 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கப்தில், மன்றோ இருவரும் துரத்தலை தொடங்கினர். கப்தில் 10 ரன் மட்டுமே எடுத்து பூம்ரா வேகத்தில் கார்த்திக் வசம் பிடிபட்டார். அடுத்து மன்றோவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது.

மன்றோ 75 ரன் (62 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), வில்லியம்சன் 64 ரன் (84 பந்து, 8 பவுண்டரி) எடுத்து சாஹல் சுழலில் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து 28.4 ஓவரில் 168 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்த நிலையில், ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 79 ரன் சேர்த்தது. டெய்லர் 39 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கேதார் வசம் பிடிபட்டார். எனினும், லாதம் – நிகோல்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு விடாப்பிடியாக 59 ரன் சேர்த்ததால் ஆட்டம் இழுபறியாக அமைந்தது. நிகோல்ஸ் 37 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டாக, லாதம் 65 ரன்னில் (52 பந்து, 7 பவுண்டரி) ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் நியூசி. வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில், பூம்ரா 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து வெற்றியை வசப்படுத்த உதவினார். நியூசி. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் தொடர்ச்சியாக 7வது தொடரை வென்று சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

ரோகித் 150வது சிக்சர்

ஒருநாள் போட்டிகளில் தனது 150வது சிக்சரை ரோகித் நேற்று விளாசினார். 165வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்திய அவர், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடிக்கு அடுத்த இடத்தை பிடித்தார். அப்ரிடி 160 இன்னிங்சில் 150 சிக்சர் விளாசி முதலிடத்தில் உள்ளார். கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடர்ந்து 2வது முறையாக ரோகித் ஷர்மா சதம் அடித்துள்ளார். 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 150 ரன் விளாசி இருந்த அவர், நேற்று நியூசி.க்கு எதிராக 147 ரன் அடித்தார். இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ரோகித் – கோஹ்லி ஜோடி 12வது முறையாக நேற்று செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடிகளில் இவர்களுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இருவரும் நேற்று 2வது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்தனர். இது இவர்களின் 4வது டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்சம். ரோகித் நேற்று தனது 15வது சதத்தை விளாசி

Share This Post