ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர் 4 பிரிவில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்தியா வீழ்த்தியது.

டாக்கா:

வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர் 4 பிரிவில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்தியா வீழ்த்தியது.

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் 10-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், வங்காளதேசத்தை 7-0 என்ற கோல் கணக்கிலும், பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மோதிய இந்தியா, தென் கொரியா ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்தியா தரப்பில் அக்‌ஷ்தீப் சிங் 15-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 19-வது நிமிடத்திலும், எஸ்.கே.உத்தப்பா 24-வது நிமிடத்திலும், குர்ஜந்த்சிங் 33-வது நிமிடத்திலும், எஸ்.வி.சுனில் 49-வது நிமிடத்திலும், சர்தார் சிங் 60-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share This Post