டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி!

டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி!

டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி!

மும்பை: இந்திய பிரசிடண்ட் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராஸ் டெய்லர், லதாம் ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி,33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி -20 -போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி வரும் 22ல் மும்பையின் வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இதற்கு முன்பாக நியூசிலாந்து அணி, இந்திய பிரசிடண்ட் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

முதல் போட்டியில் இந்திய லெவன் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லர் (102), லதாம் (108) ஆகியோர் சதம் விளாச அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய இந்திய லெவன் கருண் நாயர் (53), குர்கீரத் சிங் (65) ஆகியோர் மட்டும் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய லெவன் அணி 47.1 ஓவரில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share This Post