தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஒருநாள் தொடரை 1-4 என இழந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் வென்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர் , முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்த முடிவு, அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த அணியின் ஜேசன் பெஹெரெண்டோர்ஃப் அபாரமாகப் பந்துவீசி, 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்திய அணி, தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில், பாண்டியா மற்றும் ஜாதவ் ஆகியோரின் உதவியுடன் இந்தியா 100 ரன்களைக் கடந்தது. அதிகபட்சமாக, ஜாதவ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது.

பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் மற்றும் ஹெட் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியில், 15.3 ஓவர்களில் அந்த அணி வெற்றிபெற்றது. அந்த அணியில், அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 46 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்.

Share This Post