ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு!

ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு!

ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு!

முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ம் இணைந்து 70:30 கூட்டில் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை அக்டோபர் மாதம் முதல் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்பிஐ ஜியோ பேமெண்ட்ஸ் சேவையின் செயலாக்கத் திறன் குறித்து விளக்க வேண்டும் கோரியதால் டிசம்பர் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

4ஜி போன்

முதலில் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை ஜியோ நிறுவனம் தங்களது 1,500 ரூபாய் 4ஜி பியூச்சர் போன் சேவையுடன் வழங்க முடிவு செய்து இருந்தது.

ஆர்பிஐ

ஆனால் ஆர்பிஐ இந்தப் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அனைத்து விதிகளையும் பின்பற்றியுள்ளதா என்று சரி பார்க்கச் செயல் விளக்கம் கேட்டுள்ளதால் சேவையினைத் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த கேள்விக்கு எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பதில் ஏதும் அளிக்கவில்லை.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எஸ்பிஐ வங்கியில் 420 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 129 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனுமதி ரிலையன்ஸ் நிறுவனம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவங்குவதற்கான அனுமதியினை 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்பிஐ வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது.

 

Share This Post