தொடரும் இந்தியாவின் வெற்றிப்பயணம்

தொடரும் இந்தியாவின் வெற்றிப்பயணம்

இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் மோதிய இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

* இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 6-வது ஒரு நாள் தொடர் இதுவாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0) ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களையும் இந்தியா வென்று இருக்கிறது.

* இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களிலும் இந்திய அணியே வாகை சூடியிருக்கிறது.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை 4 அரைசதங்கள் அடித்துள்ளார். 4 அரைசதங்களும் இந்த ஆண்டில் எடுத்தவை தான்.

* ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தும் அந்த அணி மண்ணை கவ்வுவது இது 3-வது முறையாகும்.

* 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் 3 ஆட்டங்களில் தோற்பது இது 3-வது நிகழ்வாகும்.

* வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 13 ஆட்டங்களில் (11-ல் தோல்வி, 2-ல் முடிவில்லை) வெற்றி பெறவில்லை.

* விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 38 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் பெற்ற 30-வது வெற்றி இதுவாகும்.

Share This Post