மலையாள சினிமா பக்கம் ஒதுங்கிய சோனா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை, தயாரிப்பாளர் என்று வலம் வந்த சோனா, தற்போது வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கியிருக்கிறார். தனது சொந்த வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாகவும், அதில் தனது இருட்டு வாழ்க்கை ரகசியங்களும் இடம்பெற போவதாகவும் கூறி, அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்திய சோனாவுக்கு, எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் மற்ற மொழிப்…
ஏக் தா டைகர் தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்து சாதனைப் படத்திருக்கும் சல்மான்கானின் படமான ‘ஏக் தா டைகர்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதனால் அந்த படத்திற்கு கொடுத்த…
இறகு பந்து தர வரிசை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ஷாலினி அஜித்

நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித்குமார் இறகு பந்து தர வரிசை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ஷாலினி, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். பிறகு தனக்கு ஆர்வமுள்ள விளையாட்டான பேட்மிட்டன் எனப்படும் இறகு பந்து  விளையாடுவதில் ஈடுபட்டு வந்தார். இதற்காக பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டு…
ஸ்ரீதேவிக்காக சம்பளம் வாங்க மறுத்த அஜீத்

ஸ்ரீதேவி நடிக்கும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த அஜீத், அதற்கான சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார். நடிப்புக்கு முழுக்குப் போட்ட நடிகை ஸ்ரீதேவி, தற்போது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆங்கிலம் தெரியாத குடும்ப தலைவி படும் அவஸ்தைகளே இப்படத்தின் கதையாகும். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும்…
சால்ட் அண்ட் பெப்பர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பிரகாஷ்ராஜ்

கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் வசூல் சாதனைப் படைத்த சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் ரீமேக் செய்யப் போகிறார். மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படம் 140 நாட்களையும் கடந்து ஓடியதுடன் 2011ஆம் ஆண்டிற்கான பிரபலமான திரைப்படம் என்ற இரண்டு மாநில அரசு…
தமிழுக்கு வரும் பிரபல கேரள தயாரிப்பு நிறுவனம்

மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கும் ‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ தமிழ் திரையுலகில் நுழைகிறது. இந்நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ்ப் படத்தை சிம்பு தேவனின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார். ‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்து, மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களாக வலம் வரும் சதானந்தன், தேபோபோரேதே ஆகியோர்…
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தொடங்கி வைத்த கேமரா கண்காட்சி

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சென்னையில் புகைப்பட கேமரா கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கேமரா கண்காட்சியை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். உலக புகைப்பட தினமான ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று சென்னை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த கேமரா…
11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்த விஜய்

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவச திருமணம் செய்து வைத்தார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் திருமண ஜோடிகளுக்கு 51…
டிவி சேனல் தொடங்கப் போகும் சக்சேனா

சன் தொலைக்காட்சி மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் முன்னாள் தலைமை அதிகாரியான ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தற்போது சாக்ஸ் பிக்சர் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் அவர் விரைவில் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கப் போகிறார். கடந்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மனிதராக விலங்கிய ஹன்ஸ்ராஜ் சக்சேனா,…
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த பேரரசு

மசாலா படங்களுக்கு பேர்போனவரான இயக்குநர் பேரரசு, இயக்கத்துடன் பாடல்களும் எழுதி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். பரத், சுனைனாவை வைத்து ‘திருத்தணி’ படத்தை இயக்கியிருக்கும் பேரரசு, அப்படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். ‘திருத்தணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 19) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள்…