மெகந்தியால் அலர்ஜி: வதந்தியால் இரவு முழுவதும் பரபரப்பு

செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்து கொண்டனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக நேற்று இரவு தகவல் பரவியது. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணிக்கு சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த  சில பெண்கள் மருத்துவமனைக்கு…
ரம்ஜான்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமிய பெருமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: ரம்ஜான் திருநாளையொட்டி முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புனித குரான் கூறியுள்ள கொள்கைகளை பின்பற்றி உண்மையான, உத்தமமான வாழ்க்கையை மேற்கொள்ள தீர்மானிப்போம். உண்ணாநோன்பை…
சின்சின்னாட்டி டென்னிஸ்: பெடரர் சாம்பியன்

சின்சின்னாட்டிஸ் இறுதி போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், 2வது இடத்தில் உள்ள ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் பெடரர், 6-0, 7-6(7) என்ற செட் கணக்கில் ஜேதகோவிச்சை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ரம்ஜான் வாழ்த்து பிரதமர் மன்மோகன்சிங்

ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஈத் பெருநாள், மகிழ்ச்சிக்குரிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு ஈத் பண்டிகை நமது கலாசார பிணைப்பினை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் சமாதானத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என கூறியுள்ளார்.
சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு: சச்சின் வழங்கினார்

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுக்கு பி.எம்.டபுள்யூ கார் வழங்கினார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கார்சாய்னாவுக்கு வழங்கப்பட்டது. பி.எம்.டபுள்யூ காரை சாய்னாவுக்கு வழங்கி சச்சின் பேசுகையில், சாய்னா சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அவர் திருப்தி அடைந்திருக்க மாட்டார். ஒரு சிறந்த விளையாட்டு வீரரான உங்களுக்கு இன்னும்…
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்:  ஜெயலலிதா கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே வேண்டும்: ஜெயலலிதா கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்…
மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது

மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது மழை குறைவு : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது ,கர்நாடகத்தில் மழை குறைந்து, காவிரில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.  இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம்…
மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக பல சிறப்புத் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை…