இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல், 7 வீரர்கள் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்றிரவு பிம்பர் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் (LoC) இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்,  இந்திய உயர்மட்ட கமிஷனர் கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைப் பகுதியில் பாக்., படைகளும் தாக்குதல் நடத்தி உள்ளன. பாக்., படைகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், தொடர்ந்து வருவதால் பாக்., தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.

More