ஆஸ்கார் விருதை பெற்றார் நடிகர் ஜாக்கி சான்

ஆஸ்கார் விருதை பெற்றார் நடிகர் ஜாக்கி சான்

பிரபல ஹாலிவுட் ஸ்டாரான ஜாக்கிசான் ஹாங்காங்கில் பிறந்தவர். இவர் தன்னுடைய 8 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்கத்தொடங்கி விட்டார்.

அதன் பின்னர் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் ஹிட் அடித்தன.இவர் நடிக்கும் படம் ஆக்சன் படமாக இருந்தாலும் அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

இதன் காரணமாகவே குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவர் படத்தை விரும்பி பார்ப்பார்கள். கடந்த 50 ஆண்டுகளாக பல வித்தியாசமான படங்களில் நடித்திருந்தாலும், மற்ற விருதுகள் கிடைத்ததே தவிர ஆஸ்கார் விருது இவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது அதை நீக்கும் வகையில் இவருக்கு சினிமாவில் ஆற்றிய மிகப்பெரிய சாதனையை கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

More

Related Post