திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனை வெட்டி கொலை செய்த மணமகள் வீட்டார்

திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகளின் வீட்டார், மணமகளை கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த்வர் அனில். 24 வயதாகும் இவரும், அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அனிலின் குடும்பத்தார் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்ததுடன், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.

அதன்படி, புறநகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இவர்களுக்கு திருமணம் ஏற்பாடு நடந்தது. இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார், திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனை வெட்டி கொலை செய்தனர். மேலும், மணமகனின் தந்தையையும் கோடூரமாக தாக்கிவிட்டு, மணப்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டது.

தற்போது, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.