மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

அதே இடத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

இதனால், அடுத்த 2  தினங்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, மாலை மற்றும் இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்.