இந்திய ராணுவ வீரர்களுக்கு மோசமான ஆண்டாக அமைந்தது 2016

ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று வீரர்கள் பலியாக்கினர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். பின்னர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பாம்போர் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தற்போது ராணுவம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.