12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கொடைக்கானலில் பூத்துள்ளது!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கொடைக்கானலில் பூத்துள்ளது!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, ஐந்து வீடு, பிரகாசபுரம் சாலை, சகாயபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. தற்போது, இந்தப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கவில்லை. ஆனால், பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சித் தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அதிலும் நீல வண்ணத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்ராம் கூறியதாவது: கொடைக்கானல் மலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்தன. இந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட குறிஞ்சித் தோட்டத்தில், தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிஞ்சி மலர்களில் 20 வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை மலர்கள் இங்கு பூத்துள்ளன என்றார்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…