ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் மாயம்

ஐதராபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 7 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று, நேற்று நல்லிரவு இடிந்து விழுந்தது.

இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் மாயம்கியுள்ளார்கள்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இந்த கட்டிடத்தில் பணியாற்றியவர்கள் இரவு பணி முடிந்து, அந்த கட்டிடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று கட்டிடம் சரிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகியுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி பலர் மாயமாகியுள்ளார்கள்.

தற்போது நடைபெற்று வரும் மீட்பு பணியில், காவல் துறை, மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளார்கள். மாயமாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம், என்று அச்சப்படுகிறது.

தற்போது, இடிபாடுகளில் சிக்கியவர்களில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, கலால் வரித்துறை அமைச்சர் பத்மா ராவ், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.