திருச்சி தோட்டா தொழிற்ச்சாலையில் தீ விபத்து!

துறையூர் தோட்டா தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஆலையின் 4-வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 6 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆலையின் மற்ற பிரிவுகளில் பணியாற்றி 300 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். இதனிடையே மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

பூமிக்கு அடியில் செயல்பட்ட ஆலை இன்று காலை வெடித்து சிதறியது. விபத்து நடந்த ஆலையில் பாறைகளை தகர்ப்பதற்கான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தோட்டா தயாரிக்கும் ஆலையின் உரிமையாளரை கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி பெற்று வெடிமருந்து தயாரிக்கும் அதாவது, கிணறுகளுக்கு வைக்கப்படும் தோட்டா, மற்றும் அதற்கு உண்டான மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுயில் சுமார் 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து கம்பெனிகள் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த ஆலை முடப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்துள்ளார். விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் என்று அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் உறுதி அளித்துள்ளார். செங்காடுப்பட்டியில் உள்ள மற்றொரு வெடிமருந்து ஆலையையும் மூட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.