வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 157.97 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 33,853.63 புள்ளிகளாக உள்ளது. உள்கட்டமைப்பு, ஐ.டி, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.01% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.95 புள்ளிகள் அதிகரித்து 10,485.75 புள்ளிகளாக உள்ளது.

ஓஎன்ஜிசி, டிசிஎஸ், சன் பார்மா, இன்போசிஸ், எம் & எம், கோடக் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், எச்டிஎப்சி லிமிடெட் சிப்லா, விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், லூபின், எச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் என்.டி.பி.சி போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.66%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.22% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.82% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.04% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.