வரலட்சுமியின் “ சேவ் சக்தி “ அமைப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது !

நடிகை வரலட்சுமி கடந்த மார்ச் மாதம் “ சேவ் சக்தி “ என்ற இந்த அமைப்பை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்களை ஆரம்பிக்க  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்ப்புகள் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேவ் சக்தி அமைப்பினர் கடந்த திங்களன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் , செவ்வாய் அன்று மாநில சட்ட அமைச்சர் PP. சவுத்ரி அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்கள் மகிளா நீதிமன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தினார் என்றும் , அதை பற்றியும் தெளிவாக விளக்கினர். அதற்கு  பதிலாக மாநில அரசு நிச்சயம் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பதிலளித்து உள்ளனர். மாநில சட்ட அமைச்சரிடம் கோரிக்கை வைத்த போது மகிளா நீதிமன்றங்கள் நாடு முழுவதும் சிறப்பாக இயங்க தாம் உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தேசிய அளவில் இந்த அமைப்பு வெற்றி பெற அமைப்பினரின் செயல்பாடு உதவியாக இருக்கும் என்றும் மேலும் கிராம பகுதி மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் சிறப்பாக சேவ் சக்தி அமைப்பு செயல்படும் என்கிறார்கள் அமைப்பினர்.