போர் பீதி லெபனானை விட்டு வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவு

போர் பீதி.. லெபனானை விட்டு வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவு

ரியாத்: லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் உடனடியாக லெபனானில் இருக்கும் சவூதி மக்களை வெளியேற சொல்லி இருக்கிறது சவூதி அரசு. ஏற்கனவே சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு பேட்டியில், லெபனான் அரசு சவுதி அரேபியா மீது போர் அறிவித்து இருப்பதாக அவர் கூறினார். லெபனானுக்கும், சவுதிக்கு இடையில் நடக்கும் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம் ஈராக் தான் என கூறப்படுகிறது. ஷியா, சன்னி முஸ்லீம் பிரச்சனை பெரிய உலக போர் ஒன்றை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்படி பிரச்சனை தொடங்கியது
லெபனானுக்கும், சவுதி அரேபியாவுக்கு இடையில் தற்போது உருவாகி இருக்கும் பிரச்சனைக்கு முதற்காரணம் சன்னி, ஷியா முஸ்லீம் பிரச்சனைதான். முதலில் ஈராக்கிற்கு, சவுதிக்கும் இடையில்தான் பிரச்சனை தொடங்கியது. சவூதி சன்னி நாடு, ஈராக் ஷியா நாடு.சவுதியில் இருக்கும் மெக்காவை பார்வையிட வரும் ஷியா முஸ்லிம்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதில் தான் முதலில் பிரச்சனை தொடங்கியது. அதன்பின் அது அந்த பிராந்தியத்தில் யார் ‘பெரிய கை’ என நிரூபிப்பதில் சென்று முடிந்து இருக்கிறது.

லெபனான் எப்படி உள்ளே வந்தது
லெபனான் பொதுவாகவே போர் அறிவிக்க கூடிய நாடு கிடையாது. அமைதியான வெளியுறவுக் கொள்கையை கொண்ட நாடு. ஆனால் அந்த நாட்டில் சில நாட்களாக சன்னி முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சவுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டில் இப்படி நடப்பதால் சவுதி சில நாளாக லெபனான் மீது கோபத்தில் இருந்தது. மேலும் ஈராக் சில லெபனான் அதிகாரிகளுக்கு உதவியும் செய்து வந்தது.

கொட்டியது போர் முரசு
சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் தாமார் அல் சபான் சிலநாட்களுக்கு முன் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். அப்போது அவர் ”லெபானின் முக்கிய இயக்கமான லெபனான் ஹஸபுல்லா இயக்கம் எங்கள் மீது போர் அறிவிக்க காத்து இருக்கிறது” என்று கூறினார். மேலும் அவர் இது குறித்து பேசுகையில் லெபனான் அரசாங்கம் ஈராக்குடன் சேர்ந்து ஏற்கனவே எங்கள் மீது போர் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

யார் ஹெஸ்புல்லா இயக்கத்தினர்

ஹெஸ்புல்லா இயக்கம் ஈராக்கின் குடையின் கீழ் வாழும் பெரிய அரசியல் இயக்கம் ஆகும். கடந்த சில மாதங்களாக லெபனானில் நிறைய அரசியல் குழப்பங்கள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக சவுதி அரேபியா இருப்பதாக கூறப்படுகிறது. லெபனானின் பிரதமர் சில நாட்களுக்கு முன்பு பதவி விலக்கியதற்கு கூட சவூதி அரேபியாதான் காரணம் என லெபனான் ஹஸபுல்லா இயக்கம் தெரிவித்து இருந்தது. இதன்காரணமாகவே ஹெஸ்புல்லாக்களுக்கும் சவுதிக்கும் முட்டலும் மோதலுமாக இருக்கிறது.

பெரிய இயக்கம் ஆகி இருக்கிறது
முதலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இயக்கமான லெபனான் ஹெஸ்புல்லா இயக்கம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. சவுதி அரசால் வழிநடத்தப்பட்ட லெபனானின் முன்னால் பிரதமர் அல் ஹராரி அந்த இயக்கத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறி விட்டார். மேலும் அவர் அந்த இயக்கம் குறித்த போதிய எச்சரிக்கையை சவுதிக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் அழுத்தம் காரணமாக தனது பதவியில் இருந்து விலகினார்.

லெபனானை விட்டு வெளியேறும் மக்கள்
இந்த நிலையில் சவுதி அரசின் வெளியுறவுத் துறை புதிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் ”லெபனானில் இருக்கும் சவூதி மக்களும், சன்னி முஸ்லிம்களும் உடனடியாக வெளியேறுங்கள். சவுதிக்கு திரும்பி வந்துவிடுங்கள். போர் நடக்க இருக்கிறது. அந்த நாட்டில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம்” என்று கூறியிருக்கிறது. இதன் காரணமாக போர் புயல் சின்னம் அந்த பிராந்தியத்தில் வலுப்பெற்று இருக்கிறது.