பெங்களூரு 2 மாடி கட்டட விபத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை சஞ்சனா உயிரிழந்தது!

பெங்களூரு 2 மாடி கட்டட விபத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை சஞ்சனா உயிரிழந்தது!

பெங்களூருவில் இடிந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சஞ்சனாவும் நேற்று உயிரிழந்தார்.
பெங்களூரு ஈஜிப்புரா பன்னப்பா லேஅவுட் 7-வது குறுக்குச் சாலையில் உள்ள 2 மாடி கட்டடத்தில், சமையல் எரிவாயு உருளை திங்கள்கிழமை காலை (அக்.16) வெடித்தது.

இதில் 2 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே அங்கு வசித்து வந்தோர் பலர் சிக்கினர்.

தகவலின்பேரில், தீயணைப்புப் படை வீரர்களும், போலீஸாரும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், 8 மாத கர்ப்பிணியான அஸ்வினி (22), ரவிசந்திரன் (30), கலாவதி (68), ஹரிபிரசாத், பவன், கல்யாண், மாலாஸ்ரீ ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சஞ்சனா (3) உள்ளிட்ட 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 மணி நேர போராட்டங்களுக்கு பிறகு தேசிய மீட்பு குழுவினர் காயங்களுடன் குழந்தை சஞ்சனாவை (3) மீட்டனர். மீட்கப்பட்ட சஞ்சனா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சஞ்சனாவின் பொற்றோர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், கர்நாடக அரசு அவளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சஞ்னா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.