பிரதமர் மோடியின் புல்லட் ரயில் திட்டத்துக்காக தமிழிசை பாராட்டு

நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடியின் ‘தொலை நோக்குப் பார்வை’யை புகழ்ந்து தள்ளினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

நேற்றைய தினம் புல்லட் ரயில் அகமதாபாத்தில் துவக்கப்பட்டிருக்கிறது, ஜப்பான் பிரதமரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார் நம் பிரதமர். வெளிநாட்டு பயணம் செல்கிறார் என கிண்டலடிக்கும் எதிர்க்கட்சிகள் அப்படி சென்று வந்த ஜப்பான் நாட்டினால் இந்தியா அடையும் பயனைப்பாருங்கள்.

வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜப்பான் உதவியுடன் நாட்டிலேயே முதன்முறையாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்படுகிறது. 1லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி செய்கிறது. 0.1 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் ஜப்பான் கடன் கொடுக்கிறது.

இந்த கடன் தொகையை 50 ஆண்டுகளில் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் 15 ஆண்டு சலுகை காலமும் அளிக்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்வதற்கு 2 மணி நேரம் மட்டுமே ஆகும். (இப்போது 8 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விரைவாக வரும்போது பிற மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலாவும் மேம்படும்.

இந்தியாவிலேயே புல்லட் ரயில் தொழில்நுட்பம் வந்தடைய தொலைநோக்குடன் செயல்படும் பாரத பிரதமரை போற்றும். அடுத்த தேர்தலை பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் சாதாரண அரசியல்வாதிகள் மத்தியில் அடுத்த தலைமுறைக்காக தொழில்நுட்ப வளர்ச்சியினை ஜப்பானில் இருந்து கொண்டு வந்த மோடி அவர்களின் அரசை பாராட்டுவோம்.