பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கப் பதக்கம் வென்றார்

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கப் பதக்கம் வென்றார்

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்து உள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

எஃப்-46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில், ஜஜாரியாவின் இடது கை அகற்றப்பட்டது. தேவேந்திர ஜஜாரியா 2004-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2012-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று இருக்கிறார்

2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, தற்போது ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் ஈட்டியை வீசி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில், 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவராகிறார் தேவேந்திர ஜஜாரியா. மேலும், இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் பெற்றுள்ளது. ஏற்கனவே பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில்…