பல கோடி மதிப்புள்ள விளம்பரத்தை உதறிய விராட் கோலி

கிரிக்கெட்டை தவிர்த்து எம்.ஆர்.எஃப். டயர்ஸ், பூஸ்ட், பூமா ஸ்போர்ட்ஸ் கியர், ஆடி, பெப்சி உள்பட பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்கிறார். இந்நிலையில் கோலியை ஒப்பந்தம் செய்ய வந்த ஒரு விளம்பர நிறுவனத்தை அவர் உதறிதள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பல கோடி ரூபாய் வருமானம் வரும் குளிர்பான விளம்பரம் ஒன்றை வீராட் கோலி வேண்டாம் என கூறி உள்ளார்.

இந்த குளிர்பானத்தை அவர் அருந்துவது இல்லை என்பதால் அதை மறுத்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் விராட் கோலி உறுதியாக இருப்பது பலரது பாராட்டுதலையும் பெற்றுத்தந்துள்ளது.

அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால் செய்ய முடியாத ஒன்றை அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன் என்றார்.

முதலில் ஒன்றை நான் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே சகவீரர்களை அதைச் செய்யுமாறு கூறுவேன் என்று கூறியிருந்தார் விராட் கோலி.